துணைவேந்தர் கணபதியின் ஜாமின் மனு விசாரணை ஒத்திவைப்பு

  முத்துமாரி   | Last Modified : 06 Feb, 2018 12:09 pm


லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள துணைவேந்தர் கணபதியின் ஜாமின் மனுவுக்கு தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி, உதவிப் பேராசிரியர் பணிக்காக சுரேஷ் என்பவரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனையடுத்து சுரேஷ் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் திட்டப்படி, துணைவேந்தரிடம் சுரேஷ் பணத்தை அளித்தார். அந்த நேரத்தில் வந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் துணை வேந்தர் கணபதியை கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும், அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.  துணை வேந்தரின் மனைவி, வீட்டில் உள்ள பணத்தை கிழித்து கழிவுநீர் தொட்டியில் போட்டுள்ளது தெரிய வந்தது. இதனால் அவருடைய மனைவியும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களுடன் துணைவேந்தருக்கு உதவியாக இருந்த அந்த பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். துணைவேந்தர் உள்பட கைது செய்யப்பட்டவர்கள் மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் துணைவேந்தர் கோவை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு அளித்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் துணைவேந்தரின் ஜாமின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, விசாரணை வருகிற பிப்ரவரி 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close