கார்த்தி சிதம்பரம் வழக்கு: சிபிஐ, மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

  முத்துமாரி   | Last Modified : 07 Feb, 2018 07:43 pm


கார்த்தி சிதம்பரம் வழக்கில் சிபிஐ மற்றும் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. கார்த்தி சிதம்பரம் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர், தன் மீதான லுக் அவுட் நோட்டீசை திரும்பப் பெறக்கோரி பலமுறை உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தும் அது தள்ளுபடி செய்யப்பட்டது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெற்று பல்வேறு நிபந்தனைகளுடன் கார்த்தி சிதம்பரம் தன்னுடைய மகளின் அட்மிஷனுக்காக லண்டன் சென்று வந்தார். இந்நிலையில் வர்த்தக ரீதியாக தன்னைத் தொடர்ந்து வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கார்த்தி கோரிக்கை விடுத்து வந்தார். இதனையடுத்து கார்த்தி சிதம்பரத்தின் வழக்கை உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியது. 

கார்த்தி சிதம்பரத்தின் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில், கார்த்தி சிதம்பரத்தை வெளிநாடு செல்ல அனுமதிப்பது தொடர்பாக சிபிஐ மற்றும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிபிஐ மற்றும் மத்திய அரசு கூறும் பதிலை பொறுத்து கார்த்தி சிதம்பரத்தை வெளிநாடு செல்ல அனுமதிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close