மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்து: கடைகளை அகற்ற உத்தரவு

  முத்துமாரி   | Last Modified : 08 Feb, 2018 03:59 pm


மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பிப்ரவரி 2ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாயின. மேலும் வசுந்தராயர் மண்டபத்தின் தூண்களும் இடிந்து விழுந்தன. விபத்து குறித்து ஆய்வு நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில் கோவில் கடைக்காரர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

அவர்கள் அளித்த மனுவில், "கோவிலில் தீ விபத்து நடந்ததற்கு கோவில் நிர்வாகம் தான் காரணம். கடைகளுக்கு வாடகை அதிகமாக வசூலிக்கிறார்கள். ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செய்வதில்லை. கோவில் நிர்வாகத்தின் அலட்சியம் தான் விபத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும், கோவில் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் வளாகத்தில் உள்ள கடைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை நாளை மதியம் 12 மணிக்குள் அகற்ற வேண்டும் எனவும், கோவில் நிர்வாகம் கூறும் இடத்தில் கடைகளை வைத்துக்கொள்ளலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோவில் வளாகத்தில் உள்ள 115 கடைகளை அகற்ற ஏற்கனவே கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close