தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க கால தாமதம் ஏன்? மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

  முத்துமாரி   | Last Modified : 14 Feb, 2018 03:15 pm


தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவனை அமையும் இடத்தை தேர்வு செய்ய கால தாமதம் ஏன்? என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கூறி நான்கு ஆண்டுகள் ஆன நிலையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு நீதிமன்றத்தில் அளித்த பதில் மனுவில், 'ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது. இதன்பிறகு மத்திய அரசு தான் உரிய பதிலை அளிக்க வேண்டும்' என கூறியது. 

இதன் அடுத்த விசாரணையில், மத்திய அரசு கால அவகாசம் கேட்டதையடுத்து, நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்தது.  தமிழக அரசு பரிந்துரை செய்துள்ள இடங்களை ஆய்வு செய்து 2018 புத்தாண்டு பரிசாக தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவுக்கு மத்திய அரசு அதுவரை எந்த பதிலும் அளிக்காததால் மத்திய சுகாதாரத்துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அவர் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

பின்னர் இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் சார்பில், 'இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மத்திய சுகாதாரத்துறைக்கு ஒரு பரிந்துரை கடிதமும் அனுப்பப்பட்டது. இன்று மீண்டும் மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் நீதிபதிகள், 'தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் தாமதம் ஏன்?' என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியது. மேலும், 'தமிழக அரசு பரிந்துரை செய்த இடங்களின் சாதக, பாதகத்தை ஆராய்ச்சி செய்து வரும் ஜூன் 14ம் தேதிக்குள் பதில்மனு அளிக்க வேண்டும்' என உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close