தமிழகத்துக்கான காவிரி நீரை குறைத்தது உச்ச நீதிமன்றம்

  SRK   | Last Modified : 16 Feb, 2018 11:52 am


காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த நீர்பங்கீட்டு திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடுவர் மன்றம், தமிழகத்திற்கு கர்நாடகா 192 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், தற்போது அதை உச்ச நீதிமன்றம் குறைத்துள்ளது.

கர்நாடகாவிற்கு 14.75 டி.எம்.சி தண்ணீர் அதிகமாக வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். இதனால் தமிழகத்திற்கு கர்நாடகா, 177.25 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட வேண்டும். தனது தீர்ப்பில், எந்த ஒரு மாநிலமும், காவிரி நீரை உரிமை கொண்டாட முடியாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறிப்பிட்டார். 

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

காவிரி நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் அதைவிட 14.75 டிஎம்சி குறைத்து தற்போது உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் 20 டிஎம்சி நிலத்தடி நீர் உள்ளது என்று கூறிய நீதிபதிகள், கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி காவிரிநீர் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.  கேரளா மற்றும் புதுச்சேரிக்கு நதிநீர் பங்கீட்டில் மாற்றம் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு தமிழக விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

என்னதான் தீர்ப்பு வந்தாலும், அதை நிறைவேற்ற கர்நாடகம் அனுமதிக்குமா என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறி... தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பின் படியாவது தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் எதிர்பார்ப்பு.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close