எந்த மாதம் எவ்வளவு? காவிரி தீர்ப்பு விவரம்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 16 Feb, 2018 01:59 pm

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. 465 பக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்துத்துக்கு கர்நாடகம் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது. இதன்படி, இயல்பான வருடம் என்றால், 

ஜூன் மாதம் 10 டி.எம்.சி

ஜூலை 34 டி.எம்.சி

ஆகஸ்ட் 50 டி.எம்.சி

செப்டம்பர் 40 டி.எம்.சி

அக்டோபர் 22 டி.எம்.சி

நவம்பர் 15 டி.எம்.சி

டிசம்பர் 8 டி.எம்.சி

ஜனவரி 3 டி.எம்.சி

பிப்ரவரி முதல் மே மாதம் வரை முறையே 2.5 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டும். இந்த அளவு பிலிகுண்டுலு அளவிடும் இடத்தில் கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம், 192 டி.எம்.சி வரும். இதில், தமிழகம் தன்னுடைய பங்காக 182 டி.எம்.சி-யை எடுத்துக்கொள்ள வேண்டும். மீதம் உள்ள 10 டி.எம்.சி சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close