தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை முறைப்படுத்தி ஏப்ரல் மாதத்திற்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
'தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் முறைப்படுத்தவில்லை, அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே அரசு கல்விக்கட்டணம் நிர்ணயிக்கும் வரை சேர்க்கைக்கு தடை விதிக்க வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஹக்கீம் என்பவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில், தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை முறைப்படுத்தி ஏப்ரல் மாதத்திற்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.