புதுச்சேரி நியமன எம்.எல்.ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

  முத்துமாரி   | Last Modified : 24 Mar, 2018 01:42 pm


புதுச்சேரியில் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் 3 பேரை நியமித்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளார்.  

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகிய மூன்று பேரை நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்து அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இம்மூவரும் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அம்மாநில ஆளும் காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமீபத்தில் இவர்கள் மூவரும் பேரவைக்கு வரக்கூடாது என சபாநாயகர் உத்தரவு பிறப்பித்திருந்தார். 

இது தொடர்பான வழக்கில் பா.ஜ.கவைச் சேர்ந்த 3  எம்.எல்.ஏக்கள்  நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம்(மார்ச்.22) தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு அளித்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close