முதியோர்கள் கருணை இல்லத்திற்கு செல்ல விரும்பவில்லை: தமிழக அரசு விளக்கம்

  முத்துமாரி   | Last Modified : 28 Mar, 2018 01:29 pm


காஞ்சிபுரம் கருணை இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மீண்டும் அந்த இல்லத்திற்கு செல்ல விரும்பவில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

காஞ்சிபுரம் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் தொடர் மரணங்கள் நிகழ்வதாக எழுந்த புகாரையடுத்து, அரசு அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு கருணை இல்லம் மூடப்பட்டது. கருணை இல்லத்தில் இருந்தவர்கள் அரசின் அனுமதி பெற்ற வேறு காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். 


இதுகுறித்து கருணை இல்ல நிர்வாகி தாமஸ் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், அனுமதி பெற்று தான் தாமஸ் கருணை இல்லத்தை நடத்துகிறார் எனக்கூறி, மீட்கப்பட்ட முதியோர்களை மீண்டும் கருணை இல்லத்தில் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மொத்தம் 294 பேர் வேறு இல்லங்களுக்கு மாற்றப்பட்டதாகவும், அதில் 12 பேர் மரணமடைந்துவிட்டதாகவும் தமிழக அரசு நீதிமன்றத்தில் நேற்று தகவல் தெரிவித்திருந்தது.  

இந்த நிலையில், கருணை இல்லத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் மீண்டும் அந்த இல்லத்திற்கு செல்ல விரும்பவில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து, யாருடைய அறிவுறுத்தலின்பேரில் கருணை இல்லத்தை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அரசின் விளக்கம் உண்மைதானா என ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையராக சஞ்சய் மோகனை நியமித்து மீட்கப்பட்ட முதியோர்களின் விருப்பத்தைக் கேட்டு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close