ஜெ.ரத்த மாதிரி இல்லை: நீதிமன்றத்தில் அப்போலோ தகவல்

  Newstm Desk   | Last Modified : 26 Apr, 2018 12:34 pm


ஜெயலலிதாவின் ரத்த மாதிரி தங்களிடம் இல்லை என அப்போலோ நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தகவல் தெரிவித்துள்ளது. 

பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். தான் ஜெயலலிதாவின் மகள் எனவும் வைணவ முறைப்படி இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்பதால் ஜெயலலிதாவின் உடலை தன்னிடம் ஒப்படைக்குமாறும் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கில், அம்ருதா ஜெயலலிதாவின் மகள் தானா? என்று அறிய, டி.என்.ஏ பரிசோதனை செய்ய நீதிமன்றம் முடிவெடுத்தது. ஆனால், ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக்கூறி, அ.தி.மு.க தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருந்தும் வேறு வழியில்லாமல் நீதிமன்றம்  டி.என்.ஏ பரிசோதனைக்கு உத்தரவிட்டது.

இதற்காக ஜெயலலிதாவின் ரத்த மாதிரி குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அப்போலோவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு அப்போலோ தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்றம் மறுக்கவே, இன்றைய விசாரணையில் அப்போலோ நிர்வாகம் வாய் மொழியாக நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. அதன்படி, ஜெயலலிதாவின் ரத்த மாதிரி அப்போலோ மருத்துவமனையில் இல்லை என தெரிவித்துள்ளது. தொடர்ந்து வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போலோவின் இந்த தகவலால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கும் என இன்றைய வழக்கின் விசாரணைக்கு பிறகே தெரிய வரும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close