குட்கா வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

  anandan   | Last Modified : 22 May, 2018 06:38 am

குட்கா வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக சுகாதாரத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களின் உடல்நலன் கருதி, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடந்த 2013ம் ஆண்டு தமிழக அரசு தடை செய்தது. ஆனால் 2013ம் ஆண்டு எடுத்த ஒரு சர்வேயில், தமிழகத்தில் சுமார் 28 லட்சம் பேர் குட்கா உபயோகிப்பதாக தெரிய வந்தது.

இதையடுத்து, தடையை மீறி குட்கா விற்பனை செய்வது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் குட்கா ஊழல் வழக்குகளில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்று குட்கா விற்பனையை அனுமதிப்பதாக ஆதாரங்கள் சில வெளியாகின. 

பின்னர் தி.மு.கவைச் சேர்ந்த ஜெ.அன்பழகன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், "குட்கா ஊழல் வழக்குகளை ஊழல் வழக்குகளில் அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை அதிகாரிகளின் பங்கு இருப்பதால் வழக்குகளை சிபிஐ தரப்புக்கு மாற்ற வேண்டும் அல்லது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைக்க வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டது. 

அதனடிப்படையில் குட்கா ஊழல் வழக்குகள் அனைத்தையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக சுகாதாரத்துறைஅதிகாரி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அவர் அளித்த மனுவில், "குட்கா ஊழல் வழக்குகளில் தமிழக காவல்துறையே சிறப்பாக செயல்படுகின்றனர். வழக்கை அவர்கள் விசாரித்து வரும் நிலையில், சிபிஐ விசாரணை தொடர்ந்தால் குழப்பம் ஏற்படும். எனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கை வரும் மே 14ம் தேதி (திங்கட்கிழமை)விசாரிக்க இருக்கிறது.

மேலும் குட்கா தொடர்பான மற்றொரு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தது. அதன்படி, கோவை கண்ணம்பாளையத்தில் 6 ஆண்டுகளாக அரசின் அனுமதியின்றி செயல்பட்டு வரும் குட்கா ஆலையின் உரிமத்தினை உச்ச நீதிமன்றம் இன்று தடை செய்துள்ளது. வரும் ஜூலை மாதம் வரை குட்கா ஆலைக்கு உரிமம் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close