கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு - இருவருக்குப் பிடி வாரண்ட்

  Shalini Chandra Sekar   | Last Modified : 09 Mar, 2018 11:23 am


ஜெயலலிதா மட்டுமல்ல அவரது காவலாளி இறப்பிலிலும் மர்மம் இன்னும் விலகவில்லை. நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற கொள்ளை மற்றும் எஸ்டேட் காவலாளி பகதூர் கொலையிலும் அந்த மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடையதாக எண்ணி கேரள மாநிலத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொடர்பான விசாரணை உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் தொடர்புடைய சயான், மனோஜ் சாமி, ஜம்ஷேர் அலி, ஜித்தின் ஜாய், சதீஷன், சந்தோஷ் சாமி, வாளையாறு மனோஜ், உதயகுமார், குட்டி ஜிஜின் ஆகிய 9 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு அவர்கள் வெளியே வந்துவிட்டனர். தீபு என்பவருக்கு கேரள அரசால் தடையில்லாச் சான்று வழங்கப்படாததால் அவர் மட்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த வழக்கு கோத்தகிரி நீதிமன்றத்திலிருந்து உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ள சூழலில், வழக்கின் விசாரணை மார்ச் 8-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய சயான், மனோஜ் சாமி, ஜம்ஷேர்அலி, சதீஷன், சந்தோஷ் சாமி, வாளையாறு மனோஜ், ஜித்தின் ஜாய் ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) உதகை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

அதேபோல, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீபுவும் போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால், இவ்வழக்கில் தொடர்புடைய உதயகுமார், குட்டி ஜிஜின் ஆகிய இருவர் மட்டும் உதகை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதனால் அவர்கள் இருவருக்கும் உடனடியாக உதகை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பிடியாணை பிறப்பித்து மாவட்ட நீதிபதி வடமலை உத்தரவிட்டார். அத்துடன் இவ்வழக்கு தொடர்பான விசாரணையை இம்மாதம் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close