மெரினாவில் ஏன் போராட்டம் நடத்த கூடாது? தமிழக அரசுக்கு நீதிபதி கேள்வி

  Sujatha   | Last Modified : 14 Apr, 2018 08:14 am


மெரினாவில் போராட்டம் நடத்த ஏன் தமிழக அரசு தடை விதிக்கிறது? இதற்கான பதிலை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

காவிரி பிரச்னை, விவசாயிகள் பிரச்சனைக்காக தொடர்ந்து போராடி வருபவர்  தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு. இவர் டெல்லியில் 40 நாட்கள் நடத்திய போராட்டம் வித்தியாசமானது. இப்போது சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம்  நடத்த அனுமதியளிக்கும்படி போலீசாரிடம் மனு அளித்துள்ளார்.  இதற்கு போலீசார் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அய்யாகண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதியளிக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிடக் கோரி'  மனுத்தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, “மெரினா கடற்கரையில் எந்த ஒரு போராட்டத்துக்கும் அனுமதி வழங்க முடியாது. மனுதாரர் 3 மாதங்கள் போராட்டம் நடத்த அனுமதி கேட்கிறார். அதற்கும் அனுமதி வழங்க முடியாது. அனுமதிக்கப்பட்ட மாற்று இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டால், 5 நாட்கள் வரை போராட்டத்துக்கு அனுமதி வழங்க முடியும்” என்று கூறினார்.

இதையடுத்து, “மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த ஏன் அனுமதிக்க முடியாது? என்பதற்கு விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்” என்று நீதிபதி ராஜா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை 18-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close