சட்டவிரோதமான டாஸ்மாக் கடைகளை மூடுக: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 28 Apr, 2018 07:23 pm


தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமால் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது, அவ்வாறு சட்டவிரோதமாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த ஏப்ரல் 1, 2017ம் ஆண்டு முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள  பகுதிகளை நகர்ப்புற, உள்ளாட்சி சாலைகளாக மாற்றி டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.

ஆனால் நீதிமன்ற விதிமுறைகளை  மதிக்காமல் சட்டவிரோதமாக சுமார் 1500 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்ற அறிவுரைப்படி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், 'சட்டவிரோதமாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமால் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது' என உத்தரவிட்டனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close