பி.இ கட்டணத்தை டி.டி மூலமாக செலுத்த முடியாது: அண்ணா பல்கலை.பல்டி!

  Newstm Desk   | Last Modified : 10 May, 2018 04:47 pm


பொறியியல் படிப்புக்கான விண்ணப்பக்கட்டணத்தை டிடி, வரைவோலை மூலம் செலுத்த முடியாது என அண்ணா பல்கலைக்கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் ஆன்லைனில் தொடங்கப்பட்டுள்ளது. கணினி வசதி இல்லாத மாணவர்கள் நேரடியாகவும் விண்ணப்பிக்கும் பொருட்டும் அரசு சார்பில் 42 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதையடுத்து ஆன்லைனில் விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்,  கட்டணத்தை டிடி, வரைவோலை மூலம் செலுத்தலாம் என இன்று காலையில் நடைபெற்ற விசாரணையில் அண்ணா பல்கலைக்கழகம் கூறியிருந்தது. ஆனால் பிற்பகல் விசாரணையில் அப்படியே தனது கூற்றை மாற்றியுள்ளது. "விண்ணப்பக் கட்டணத்தை டிடி, வரைவோலை மூலம் செலுத்துவதில் சிக்கல் உள்ளது. எனவே மையங்களுக்கு சென்று தான் நேரடியாக சென்று ரொக்கமாக செலுத்தலாம். மைய அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு பேங்க் மூலமாக அந்த பணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close