மதுரை ஆதினத்திற்குள் நித்யானந்தா செல்லலாம்: மதுரைக்கிளை

  Newstm Desk   | Last Modified : 30 May, 2018 11:19 am


மதுரை ஆதினத்திற்குள் நுழைய நித்யானந்தாவுக்குத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஆதினத்தின் 293வது மடாதிபதியாக தன்னை அறிவித்துக்கொண்ட நித்யானந்தாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜெகதலபிரதாபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும், 'மதுரை ஆதின மடாதிபதி உயிரோடு இருக்கும்போது நித்யானந்தா தன்னை மடாதிபதியாக அறிவித்துக்கொண்டது செல்லாது' என கூறப்பட்டது. ஆனால் நித்யானந்தா தரப்பில் இது தொடர்ந்து மறுக்கப்பட்டது. 

பின்னர் நித்யானந்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நித்யானந்தா, நீதிமன்ற அறிவுரைப்படி மதுரை ஆதினத்தின் 293வது மடாதிபதியாக உரிமை கோரும் மனுவை வாபஸ் பெற்று, நீதிமன்றத்தில் மன்னிப்பும் கோரினார். இதனையடுத்து மதுரை ஆதீனத்தில் இருந்து நித்யானந்தா விலகுவது தொடர்பாக அவர் பிராமணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 

ஆனால் நித்யானந்தா எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யாததால், அவர் மதுரை ஆதினத்துக்குள் நுழையக்கூடாது என கடந்த மார்ச் 5ம் தேதி நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார். மதுரை ஆதினத்திற்கு உட்பட்ட எந்த கோவில்களுக்கும் அவர் செல்லக்கூடாது  எனவும், மதுரை ஆதீனம் உட்பட எந்த மடாதிபதியும் முறைகேடு செய்தால் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதனை எதிர்த்து அதே சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், ராஜசேகர் என்பவர் மேல்முறையீடு செய்தார். மதுரைக்கிளையின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை இன்று(மே.30) விசாரித்தது. விசாரணை முடிவில், மதுரை  ஆதினத்திற்குள் நித்யானந்தா செல்லலாம் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். பின்னர் வழக்கின் விசாரணை ஜூன் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close