வேல்முருகனின் ஜாமின் மனு தள்ளுபடி!

  Newstm Desk   | Last Modified : 07 Jun, 2018 02:45 pm
velmurugan-s-bail-plea-dismissed-by-villupuram-court

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் இறுதியில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் போராட்டம் நடத்தினர். அவர் தனது தொண்டர்களுடன் இணைந்து உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். போராட்டத்தின் நடுவே, கட்சித் தொண்டர்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். இதையடுத்து, வேல்முருகன் மற்றும் தொண்டர்கள் என 13 பேர் மீது விழுப்புரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து நெய்வேலி அனல்மின் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தியதாக வேல்முருகனை போலீசார் தேசத்துரோக வழக்கிலும் கைது செய்தனர். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து அவரது ஜாமின் மனுவின் விசாரணை இன்று விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு வேல்முருகனின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டதக நீதிபதி அறிவித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close