ஸ்மைலி அனுப்பிதால் 46 பேர் மீது எஃப்ஐஆர்: ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2018 10:53 am
court-dismissed-fir-proceedings-against-bsnl-employees-over-a-whatsapp-emoji

அலுவலக வாட்ஸ்ஆப் குரூப்பில் சிரிக்கும் ஸ்மைலி அனுப்பிய 46 பேர் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்து வருத்தும் தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடியில் உள்ள பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரியும் விஜயலட்சுமி என்பவர், அலுவலக தகவல்களை பரிமாறும் வாட்ஸ்ஆப் குழுவில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதற்கு ஊழியர்கள் பதிலளிக்கும் வகையில் சிரிக்கும் ஸ்மைலியை (Laughing Smiley) அனுப்பியுள்ளனர். இதனையடுத்து இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் அவர்கள் அந்த ஸ்மைலி அனுப்பியதால் தான் பாதிக்கப்பட்டதாகவும், அவமானப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் புகார் அளித்துள்ளார்.

இதனால் வாட்ஸ்ஆப் குழுவில் ‘சிரிக்கும் ஸ்மைலி’ அனுப்பிய 46 ஊழியர்கள் மீது பெண்கள் மீதான துன்புறுத்தல் தடுப்புச்சட்டம், எஸ்சி / எஸ்டி சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்ததது. 

தங்கள் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ். சுந்தர், எந்த ஒரு கருத்துக்கும் பதில் கருத்து கூற அனைவருக்கும் உரிமையுள்ளதாகவும், ஆனால் சிரிக்கும் ஸ்மைலியால் எதிர்தரப்பினர் பாதிக்கப்பட்டது கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இது தண்டனைக்குரிய குற்றமாகாது என 46 பேர் மீது பதிவு செய்த எஃப்ஐஆரை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி. ஊழியர்கள் மத்தியில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டால், அது பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு தான் கேடு என குறிப்பிட்ட நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட 46 பேரும் பாதிக்கப்பட்டவரிடம் எழுத்து மூலம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close