மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் நியமனம் ரத்து

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2018 03:46 pm
madurai-kamaraj-university-vice-chancellor-appointment-is-not-valid-madras-hc

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமனம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 

தமிழகத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி கடந்த 2 ஆண்டுகளாக காலியாக இருந்ததையடுத்து, செல்லதுரை துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். அதே போன்று சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக  துரைசாமி நியமிக்கப்பட்டார். இதில் மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்திற்கு  எதிர்ப்பு கிளம்பியது. அதாவது, துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் ஒருவர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது பேராசிரியராக பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால் செல்லத்துரைக்கு பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் கிடையாது என குற்றச்சாட்டு எழுந்தது. 

இதுதொடர்பாக  சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரணை முடிந்த நிலையில் இன்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதன்படி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லதுரை நியமிக்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது என நீதிபதிகள் கூறினர்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close