செல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு!

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2018 12:03 pm
sc-refuses-to-stay-madras-hc-order-in-madurai-kamaraj-university-vice-chancellor-chellathurai-s-case

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை நியமனத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக சமீபத்தில் செல்லத்துரை நியமிக்கப்பட்டார். பேராசிரியர் பணி அனுபவம் இல்லாத அவரை துணை வேந்தர் பதவிக்கு நியமித்ததற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. 

இதுதொடர்பாக  சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு கடந்த 14ம் தேதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது . விசாரணை முடிவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லதுரை நியமனம் ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். 

இதன் தொடர்ச்சியாக செல்லத்துரை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. செல்லத்துரை நியமன ரத்து தொடரும் என்றும், இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் மனுதாரர் 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close