தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் அனைத்தும் சென்னைக்கு மாற்றம்!

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2018 04:17 pm
thoothukudi-gunfire-cases-are-transferred-to-madras-hc

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. 

தூத்துக்குடியில்  நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 வழக்குகளும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 16 வழக்குகளும் விசாரணையில் இருந்து வருகின்றன. இந்த வழக்குகள் குறித்து அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.

அதாவது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளன. அனைத்து வழக்கிலும் எதிர்மனுதாரர்களாக தலைமை செயலர். டிஜிபி உள்ளிட்டோர் தான் இருக்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு வழக்கிற்கும் சென்னை, மதுரை என மாற்றி மாற்றி செல்ல நேர்வதால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. அவர்களுடைய மற்ற பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் வழக்குகள் அனைத்தையும் ஒரே இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞரும் இதனை முன்மொழிந்தார். 

அதன்படி, இந்த கோரிக்கையை ஏற்றதுடன், அரசு வழக்கறிஞரின் பரிந்துரைக்கு ஏற்ப, வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், வழக்குகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு முக்கிய வழக்குகள் ஜூலை 2ம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சிபிஐ விசாரணை கோரும் வழக்கு, சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை கோரும் வழக்கு, பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு கோரும் வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகள் முதலில் விசாரணைக்கு வருகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close