எம்.எல்.ஏக்கள் வழக்கு தள்ளுபடி; 3வது நீதிபதியாக சத்யநாராயணா நியமனம்!

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2018 12:26 pm
mla-disqualification-case-sc-appoints-judge-sathyanarayana-as-the-3rd-judge-in-case

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு தெரிவித்ததுடன், 3வது நீதிபதியாக சத்யநாராயணாவை நியமிக்க நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. 

தினகரன் ஆதரவு 17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் சஞ்சய் கோய் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், 3வது நீதிபதியாக சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி விமலாவை நியமித்ததற்கு தினகரன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், நீதிபதி விமலா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 

இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "முதலாவதாக நீதிபதி விமலா மீது மனுதாரர் வைத்துள்ள குற்றச்சாட்டுகளை திரும்பப்பெற வேண்டும். ஒரு நீதிபதி மீது இதுபோன்று குற்றச்சாட்டுகள் முன்வைப்பது சரியாக இருக்காது. நீதிபதி மீது குறை கூறி இப்படி ஒரு வழக்கினை தாக்கல் செய்யவே கூடாது. மேலும், நீதிபதியை குற்றஞ்சாட்டியுள்ள இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடியாது. எனவே மனுதாரரின் கோரிக்கைக்கு ஏற்ப, 3வது நீதிபதியை வேண்டுமானால் மாற்றலாம். நீதிபதி விமலாவுக்கு பதிலாக நீதிபதி சத்யநாராயணாவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைக்கிறது. அவர் இந்த வழக்கினை விரைந்து விசாரித்து முடிவெடுக்க வேண்டும். அவரே இந்த வழக்கின் இறுதி முடிவினை எடுப்பார்" என உத்தரவிட்டனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close