நீட் தேர்வு வழக்கு: ஜூலை 2ல் இறுதி விசாரணை!

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2018 02:15 pm
neet-exam-case-final-hearing-on-july-2

நீட் தேர்வில் தவறாக கேட்கப்பட்டுள்ள 49 வினாக்களுக்கு மதிப்பெண் வழங்ககோரிய வழக்கின் இறுதி விசாரணை ஜூலை 2ம் தேதி நடைபெற இருக்கிறது. 

மருத்துவ நுழைவுத் தேர்வான 'நீட்' தேர்வு தமிழ்மொழி வினாத்தாளில் பிழைகள் அதிகமாக இருந்ததாக தமிழக மாணவர்கள் குற்றம் சாட்டினர். மொத்தமாக 49பிழைகள் இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து சமீபத்தில் நீட் தேர்வுக்கான முடிவுகளும் வெளியாகின. தவறாக கேட்கப்பட்டுள்ள 49 வினாக்களுக்கு மதிப்பெண் வழங்ககோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணையில் இருந்து வருகிறது. இதையடுத்து நீட் தேர்வுக்கான தரவரிசைப்பட்டியல் நாளை மத்திய அரசு வெளியிடும் என்ற ஒரு தகவல் வந்துள்ளது. இதுகுறித்து

இன்றைய விசாரணையில், "நீட் தேர்வு தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தரவரிசை பட்டியல் வெளியிடுவதை நிறுத்தி வைக்க வேண்டும்" என மனுதாரர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. "மாணவர்களுக்கு மதிப்பெண்களே கிடைக்காத நிலையில் தரவரிசைப்பட்டியல் வெளியாவது சரியாக இருக்காது. தரவரிசை பட்டியலை வெளியிட ஏன் தடை விதிக்கக்கூடாது? " என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழக அரசு தரப்பில், தற்போது தரவரிசை பட்டியல் எதுவும் வெளியிடப்படாது என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் இறுதி விசாரணை ஜூலை 2ல்நடைபெறும் எனக்கூறி நீதிபதிகள் வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர். 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close