கூடங்குளம் அணுஉலையை மூட உத்தரவிட முடியாது - உச்ச நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 02 Jul, 2018 01:27 pm
can-t-be-closed-koodankulam-nuclear-power-plant-says-sc

கூடங்குளம் அணுஉலையை மூட உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுஉலை செயல்பட்டு வருகிறது. கடந்த 2013ம் ஆண்டு செயல்படத் துவங்கிய இந்த அணு உலையின் கழிவுகளையும், உபயோகிக்கப்பட்ட எரிபொருள்களையும் சேமித்து வைக்க ஒரு புதிய கட்டிடம் அமைத்துக்கொள்ளும்படி 5 ஆண்டுகள் கால அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது, மேலும் கூடங்குளம் அணுஉலையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் சில பாதுகாப்பு உத்திகளை கடைபிடிக்குமாறு கூறப்பட்டிருந்தது. 

இதையடுத்து  அணுஉலை கழிவை சேமிக்க கட்டிடம் ஏற்படுத்த மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு இடைக்கால மனு அளிக்கப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, கழிவுகளை சேமித்து வைக்கும் கட்டிடம் அமைக்க மேலும் 5 ஆண்டு காலம் அதாவது வருகிற 2022 வரை கால அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

அதே நேரத்தில், தமிழகத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் அளித்த மனுவில், 'நீதிமன்றம் கூறிய பாதுகாப்பு உத்திகளை மத்திய அரசு கடைபிடிக்கவில்லை. இதே நிலை நீடித்தால் நெல்லை மாவட்ட மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாக நேரிடும். எனவே கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்த வழக்கில் நீதிபதிகள், "அணுஉலையை மூடுவதற்கு என்னென்ன காரணங்கள் என மனுதாரர் தரப்பில் கூறப்படவில்லை. மேலும், நன்றாக செயல்பட்டு வரும் அணுஉலையை உடனடியாக மூட முடியாதுதகுந்த காரணங்கள், ஆதாரங்களுடன் மனுத்தாக்கல் செய்தால் மனு விசாரிக்கப்படும்" என தெரிவித்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close