நீட் வினாத்தாள் குறித்து சிபிஎஸ்இ-க்கு மதுரைக்கிளை எழுப்பிய 4 கேள்விகள்

  Newstm Desk   | Last Modified : 02 Jul, 2018 02:51 pm
madurai-hc-asked-cbse-for-neet-exam-tamil-question-paper

நீட் வினாத்தாள் எதன் அடிப்படையில் மொழிபெயர்க்கப்படுகிறது? என சிபிஎஸ்இ-க்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

தமிழ்மொழியில் இருந்த நீட் தேர்வுத்தாளில் 49 பிழைகள் இருந்தன எனவும் அவற்றிற்கு வினாவிற்கு 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கருணை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என சென்னை  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு வழக்கு தொடர்பட்டிருந்தது. தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவர்கள்,  "நீட் தேர்வு வினாக்கள் எந்த அடிப்படையில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்படுகிறது? 

நீட் தேர்வில் வினாக்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படும் போது பின்பற்றப்படும் விதிகள் என்ன?

நீட் தேர்வு தொடர்பான கேள்விகள் எந்த பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்படுகின்றன? அவை எந்த ஆங்கில அகராதியில் இருந்து எடுக்கப்படுகின்றன? 

தமிழில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாடத்திட்டத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளதா?" என கேள்வி எழுப்பினர். 

மேலும், போட்டி தேர்வு என்பது அனைத்து மாணவர்களுக்கும் சமமானதாக இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி வழக்கை ஜூலை 6 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close