தூத்துக்குடியில் 277 ஊழியர்களை காக்கவே துப்பாக்கிச்சூடு: டிஜிபி விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 02 Jul, 2018 05:46 pm
tn-dgp-explains-about-thoothukudi-gunfire-incident

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த 277 ஊழியர்களை காக்கவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என தமிழக டிஜிபி விளக்கமளித்துள்ளார். 

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக டிஜிபி பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் முந்தைய விசாரணையில் உத்தரவிட்டிருந்தது. 

அதன்படி, டிஜிபி ராஜேந்திரன் விளக்க அறிக்கை ஒன்றை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், "தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட வருவதாக வந்த தகவலை அடுத்து, போலீசார் அங்கு சென்று மக்களை தடுத்தது. ஆனால் போலீசாரின் தடுப்பை மீறி, அவர்கள் உள்ளே சென்றனர். அந்த சமயத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 277 ஊழியர்கள் இருந்தனர். அவர்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பில் 105 குடும்பங்கள் இருந்தன. இவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதும் துப்பாக்கிச்சூடு நடத்த காரணம். மனித உரிமையை காக்க வேண்டும் என்பதே போலீசாரின் நோக்கம். மேலும், மக்களின் போராட்டத்தில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ரூ. 28 லட்சமும், போலீஸ் வாகனங்கள், பூத், மதுக்கடைகள் என சுமார் 15.67 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

அதேபோன்று துப்பாக்கிக்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.20 லட்சமும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், காயமடைந்தவருக்கு ரூ. 5 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 235 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவ வழக்கை சிபிசிஐடி விசாரணை சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. எனவே சிபிஐ விசாரணை தேவையில்லை" என கூறப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close