ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு!

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2018 12:21 pm
sterlite-issue-national-green-tribunal-rejected-vendanta-s-plea

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று மறுப்பு தெரிவித்துள்ளது.   

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்த ஊழியர்களுக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்து தரப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்குகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகின்றன. மேலும், தமிழக அரசு சார்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசனும் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளார். 

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவுக்கு எதிராக வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த ஜூலை 3ம் தேதி மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் சுற்றுச்சூழல் விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டு வருவதாகவும் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்பட்டிருந்தது. 

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு வந்தது. இறுதியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், வருகிற 18ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்குமாறும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close