சர்கார் போஸ்டருக்காக ரூ.10 கோடி இழப்பீடு கோரி மனு: விஜய்க்கு நோட்டீஸ்!

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2018 01:04 pm
hc-sends-notice-to-sarkar-team-centre-and-state-govn-to-clarify-on-triggering-movie-poster

சர்கார் படத்தின் போஸ்டர் தொடர்பாக நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், தயாரிப்பு நிறுவனம் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் சர்கார். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் தலைப்பு கடந்த மாதம் 22ம் தேதி விஜய் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டது. அதில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற போஸ்டருக்கு பல கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு  தெரிவித்து இருந்தனர். 

இதனையடுத்து அந்த போஸ்டரை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி படக்குழு அந்தபோஸ்டரை நீக்கியது. 

இந்நிலையில் அந்த படத்தின் போஸ்டர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை தூண்டுவது போல இருப்பதாக ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். மேலும் அந்த மனுவில், நடிகர் விஜய், படத்தின் இயக்குநர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் தனித்தனியாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ. 10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பதில் அளிக்க விஜய், முருகதாஸ், சன் பிக்சர்ஸ், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close