டாஸ்மாக் கடையை 2 மணிக்கு திறந்தால் என்ன? உயர் நீதிமன்றம்

  சுஜாதா   | Last Modified : 11 Jul, 2018 06:06 am
why-not-tasmac-shop-open-by-2-o-clock

தமிழகத்தில் பகல் 12 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் மாலை 2 மணிக்கு திறந்தால் என்ன என்று  சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை மூலைமுடுக்குகளில் கூட டாஸ்மாக் கடைகள் உள்ளன. தடுக்கி விழுந்தால் ஒரு கடை என்று இயக்கப்படும் இந்த கடைகள் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். ஆனால் இதன் நேரத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என மாற்றியமைத்தார். தற்போதும் இதுவே நடைமுறையில் இருக்கிறது.      

இந்நிலையில் டாஸ்மாக் அருகில் நடத்தப்படும் பார்களில், தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா என்பது குறித்த சோதனை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, டாஸ்மாக்கை 2 மணிக்கு திறந்தால் என்ன? என கேள்வி எழுப்பினார். அதே சமயம், மதுக்கடை பார்களில் உணவுப்பொருட்கள் தரமாக இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இதுபற்றி தமிழக அரசு பதில் தர அவகாசம் கொடுத்து, இந்த வழக்கை வருகிற 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close