தமிழக அரசின் மெத்தனத்தைக் கண்டித்த உயர்நீதி மன்றம்

  திஷா   | Last Modified : 13 Jul, 2018 06:11 pm
high-court-condemn-tn-govt

சிலை கடத்தல் வழக்கில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. 

கோயில்களில் சிலை கடத்தல்களைத் தடுத்து பாதுகாப்பு அறை அமைப்பது சம்பந்தமான வழக்கில், தமிழக அரசு பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் 3000 பாதுகாப்பு அமைக்க வேண்டி இருப்பதால், 2021 வரை கால அவகாசம் கேட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. 

இதனைக் கேட்ட நீதிபதி மகாதேவன் அதிருப்தியடைந்தார்.  100 அடி கொண்ட பாதுகாப்பு அறை அமைக்க 2021 - வரை கால அவகாசம் தேவையா? இப்படி காலம் தாழ்த்தினால் இன்னும் சிலைக் கடத்தல்கள் தொடரும். கோவில்களில் பாதுகாப்பு அறை அமைப்பதில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது. இது தொடர்ந்தால் தலைமை செயலர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நேரிடும் எச்சரித்த அவர் இந்த வழக்கை வரும் 30-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close