அம்ருதாவின் ஆவணங்கள் போலியானவை: வீடியோ ஆதாரம் தாக்கல்!

  Newstm Desk   | Last Modified : 24 Jul, 2018 05:22 pm

amrutha-case-hearing-in-chennai-highcourt

அம்ருதாவின் ஆவணங்கள் போலியானவை என வீடியோ ஆதாரத்தை தாக்கல் செய்தது தமிழக அரசு.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், "கடந்த 1980 ஆகஸ்ட் 14ம் தேதி அன்று நான் ஜெயலலிதாவுக்கு மகளாகப் பிறந்தேன். மூன்று மாத குழந்தையாக இருந்தபோதே ஜெயலலிதாவின் சகோதரியான சைலஜாவுக்கு நான் தத்துக்கொடுக்கப்பட்டேன். எனது அப்பா சாரதி இறக்கும் தருவாயில் தான் நான் ஜெயலலிதாவின் மகள் என்பதை கூறினார். எனவே, ஜெயலலிதாவின் உடலைத் தோண்டியெடுத்து வைஷ்ணவ முறைப்படி அவருக்கு சடங்குகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.  

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. மேலும், இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் அவரின் சகோதரி தீபா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தீபக் கூறுகையில், " என் அத்தை ஜெயலலிதாவின் சொத்துகளைக் குறிவைத்தே அம்ருதா அவரின் மகள் எனக்கூறி பொய்யான வழக்கை தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவுக்கு சைலஜா என்ற சகோதரியே கிடையாது" என தெரிவித்துள்ளார். தீபாவும் இதனையே முன்மொழிந்தார். 

இது தொடர்பாக இன்று தமிழக அரசு தரப்பின் வாதத்தின் போது, "அம்ருதா  1980 ஆகஸ்ட் 14ம் தேதி அன்று தான் பிறந்ததாக கூறியிருந்தார். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக ஜெயலலிதா தொலைக்காட்சி விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.இதற்கான வீடியோ ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. இணையதளங்களின் இந்த ஆதாரங்கள் கிடைக்கும். மேலும், வழக்கு தொடர்பாக ஜெயலலிதா பெங்களூரு வரும் போது தனது வீட்டில் தான் தங்குவார் எனஅம்ருதா கூறுகிறார். ஒரு இசட் பிளஸ் பாதுகாப்பு கொண்ட முதல்வர் யாருக்கும் தெரியாமல் இவரின் வீட்டில் தங்கியிருப்பார் என்பது நம்ப  முடியாதது. மேலும் அம்ருதா வீட்டில் ஜெயலலிதா தங்கியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அதுபோன்று அம்ருதா ஜெயலலிதாவிடம் பேசியதாக காட்டப்படும் போன் அழைப்பு ஆவணங்கள் எதுவும் உண்மையில்லை" என வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை நாளை(ஜூலை 24) ஒத்தி வைத்தார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.