தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி பெற்றீர்களா? - நீதிமன்றம் சரமாரி கேள்வி

  Newstm Desk   | Last Modified : 30 Jul, 2018 04:26 pm
thoothukudi-shooting-madurai-high-court-pulls-up-govt-actions

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையின் போது,  தமிழக அரசிடம் நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியது. 

கடந்த மே மாதம் 22ம் தேதி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், பெண்கள், இளைஞர்கள் என மொத்தம் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, காவல்துறையின் செயல்களுக்கு நாடு முழுவதும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. தூத்துக்குடி கலெக்டர், எஸ்.பி, துணை வட்டாட்சியர்கள் உட்பட 11 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு பற்றிய முழு விசாரணையை சி.பி.ஐ நடத்த வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன.  இதுகுறித்த வழக்கு விசாரணையின் போது, மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள், அரசு மற்றும் காவல்துறையிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்த முறையாக அனுமதி பெறப்பட்டதா; வாய்வழி அனுமதியா, இல்லை எழுத்து வழி அனுமதியா; ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபின், அதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா; சமூக வலைதள முடக்கம்; உட்பட பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் கேட்டனர். 

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். வழக்கின் விசாரணை செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close