ஸ்டெர்லைட் வழக்கு: கலெக்டர் நேரில் ஆஜர்; ஹரிராகவன் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து!

  Newstm Desk   | Last Modified : 01 Aug, 2018 11:48 am
madurai-hc-cancells-hariragavan-arrest-reg-thoothukudi-sterlite-protest-case

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஹரிராகவன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் அவரது கைது ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதில் மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பார் ஹரிராகவன் மீது 93 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்பளித்தது. ஆனால் அவர் ஜாமீனாவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிராக ஹரிராகவனின் மனைவி சத்யபாமா மதுரைக்கிளையில் ஒரு மனு அளித்தார். மனுவில், "ஹரிராகவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது சட்டவிரோதமானது. அதனை உடனடியாக ரத்து செய்து, அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது. 

தொடர்ந்து, இந்த வழக்கின் நேற்றைய விசாரணையில் நீதிபதிகள், "இது ஜனநாயக நாடா? போலீசாரின் அதிகாரத்திற்குட்பட்ட சர்வாதிகார நாடா?"  என கேள்வி எழுப்பினர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

அதன்படி, இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மதுரைக்கிளையில்ஆஜராகி  விளக்கமளித்தார். கடந்த  20ம்தேதி  மாவட்ட எஸ்.பி  அளித்தபரிந்துரையின் பேரில் தான் நான் ஒப்புதல் அளித்தேன் என அவர் நீதிபதிகளிடம் தெரிவித்தார். விசாரணைக்கு பிறகு நீதிபதிகள், "ஆட்சியரின் கையெழுத்து தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது. நீங்கள் காரணமில்லாமல் செய்த தவறினால் ஹரிராகவன் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டது ரத்து செய்யப்படுகிறது" என உத்தரவிட்டார். 

இதைத்தொடர்ந்து ஹரிராகவன் ஜாமீனில் விரைவில் வெளிவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close