• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

சிலை முறைகேட்டில் ஈடுபட்ட இணை ஆணையர் கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு!

  முத்துமாரி   | Last Modified : 03 Aug, 2018 01:39 pm

madras-hc-ordered-pon-manickavel-reg-idol-scam

காஞ்சிபுரம் கோவில் சிலை முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையராக இருந்த கவிதாவுக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் சிலை செய்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, ஜாமீன் கேட்டு அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு முன்பாக விசாரணைக்கு வந்தது. 

விசாரணையில், கவிதாவை கைது செய்தது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சம்மன் அனுப்பி விளக்கம் கேட்காமல் நேரடியாக கைது செய்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு, 'போதுமான ஆதாரங்கள் இருந்ததால், கைது செய்யப்பட்டதாக பொன். மாணிக்கவேல் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இறுதியில் கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close