மெரினா நினைவிடம் வழக்கு வாபஸ்: திமுகவின் நெருக்கடி காரணமா?

  Newstm Desk   | Last Modified : 07 Aug, 2018 01:00 pm
case-against-leaders-memorial-in-marina-withdrawn

மெரினா கடற்கரையில் நினைவிடங்கள் அமைக்கக் கூடாது என தொடரப்பட்ட விவகாரத்தில், மனுதாரர் வாபஸ் பெற்றதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

சென்னையின் மெரினா கடற்கரையில், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நினைவிடங்களால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தி வழக்கு தொடரப்பட்டது. 

சமீபத்தில் உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை மோசமாக இருந்து வரும் நிலையில், திமுகவினர் தரப்பில் இருந்து மெரினாவில் இடம் ஒதுக்க வலியுறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தில் நினைவிடங்களுக்கு எதிராக உள்ள வழக்கை காரணம் காட்டி தமிழக அரசு கோரிக்கையை மறுத்ததாக தெரிகிறது. இந்நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்கறிஞர் காந்திமதி, தனது மனுவை வாபஸ் பெற்றுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close