கோவில் சிலை முறைகேடு: கவிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்!

  முத்துமாரி   | Last Modified : 07 Aug, 2018 01:41 pm

officer-kavitha-gets-anticipatory-bail-in-kanchipuram-temple-idol-scam-case

காஞ்சிபுரம் கோவில் சிலை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இணை ஆணையர் கவிதாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் சிலை செய்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, ஜாமீன் கேட்டு அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு முன்பாக கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணையில், கவிதாவை கைது செய்தது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தற்போது கவிதாவுக்கு ஜாமீன் கொடுக்கமுடியாது என்று நீதிபதிகள் கூறியிருந்தனர். 

தொடர்ந்து இன்று(ஆகஸ்ட் 7) நடைபெற்ற விசாரணையின் போது, கவிதாவை கைது செய்தது தொடர்பான ஆவணங்களை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு தாக்கல் செய்தது. அதே நேரத்தில் ஜாமீன் கேட்டு கவிதா தரப்பும் வாதம் செய்தது. கவிதா தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

மேலும், கவிதா 30 நாட்கள் திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்றும் தேவைப்படும் போது கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close