மெரினா வழக்கு: அரசின் பதிலில் தெளிவில்லை - நீதிமன்றம்

  முத்துமாரி   | Last Modified : 08 Aug, 2018 09:18 am

marina-case-is-hearing-in-madras-high-court

கலைஞர் கருணாநிதியின் உடலை மெரினாவில் இடம் ஒதுக்குவது தொடர்பான வழக்கில், "அரசின் பதிலில் தெளிவில்லை" என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி நேற்று காலமானார். அவரது உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகே அடக்கம் செய்ய கோரிய வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக 'மெரினாவில் முன்னாள் முதல்வருக்கு இடம் ஒத்துக்கூடாது' என வழக்கு தொடர்ந்த பா.ம.க, டிராபிக் ராமசாமி ஆகியோர் தங்களது வழக்கை வாபஸ் பெற்றுள்ளனர். ஆனால் தமிழக அரசு, "இந்த வழக்கில் தீர்ப்பை இப்போதே வழங்க வேண்டுமா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" என தெரிவித்தது. 

தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் ஒப்பிட்ட நீதிபதிகள், "அரசின் பதிலில் தெளிவில்லை" என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.