மெரினாவை வென்ற கலைஞர்...நீதிமன்றத்தில் நடைபெற்ற காரசார வாதங்கள் என்னென்ன?

  முத்துமாரி   | Last Modified : 08 Aug, 2018 04:41 pm
madras-hc-court-hearing-arguments

மெரினாவில் இடம் ஒதுக்குவது தொடர்பான வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற முக்கிய வாதங்கள் சில....

தி.மு.க தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடலை மெரினா கடற்கரையில், அண்ணாதுரை நினைவிடத்துக்கு அருகே அடக்கம் செய்ய தமிழக அரசிடம் தி.மு.க சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், சட்டச் சிக்கல்கள் இருப்பதாலும் அங்கு இடம் அளிக்க இயலாது, அதற்கு பதிலாக மெரினாவுக்கு பதிலாக காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கரில் இடம் தருகிறோம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து மெரினாவில் அண்ணா சமாதி அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கக் கோரி தி.மு.க சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு அவசர வழக்காக நேற்று நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு வந்தது. 

இரு தரப்பிலும் முதற்கட்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. தொடர்ந்து இன்று நடந்த வழக்கின் விசாரணையில்,  மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு எதிராக தொடரப்பட்ட 5 வழக்குகளை மனுதாரர்கள் வாபஸ் பெற்றதால் வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. 

தொடர்ந்து தமிழக அரசு மற்றும் தி.மு.க தரப்பு வாதம் நடைபெற்றது. 

அரசு தரப்பு: முன்னாள் முதல்வர்களுக்கு மெரினாவில் இடம் கிடையாது என கலைஞர் தான் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்படியே தற்போது தமிழக அரசு பதில் அளித்துள்ளது. சட்ட சிக்கல்கள் உள்ளதாலேயே எங்களால்  அனுமதி கொடுக்க முடியவில்லை.  அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.

திமுக தரப்பு:  காந்தி மண்டபம் அருகே திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதை மரியாதைக்குரியதாக கருத முடியாது. சட்டத்திற்கு உட்படாத காரணங்களைக் கூறி தமிழக அரசு அனுமதி மறுக்கிறது. எனது வாழ்வும், ஆன்மாவும் கருணாநிதிதான் என அண்ணாவே கூறியிருக்கிறார். அதனால் அவரது நினைவிடம் அருகிலேயே அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்.  

அரசு தரப்பு:  அண்ணா சமாதி வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய மட்டுமே அனுமதி கோருகிறோம். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை ஒதுக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை.  சட்டத்திற்கு உட்படாத காரணங்களைக் கூறி தமிழக அரசு அனுமதி மறுக்கிறது. மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. வழக்குகள் தான் சிக்கல் என அரசு கூறியது. அது இப்போது நீங்கியுள்ளது’ என்றனர்.

இவ்வாறு பல்வேறு காரசார வாதங்களுக்கு பிறகு இரு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் ஒப்பிட்டு பார்த்தனர். பின்னர் மெரினாவில் கருணாநிதியின் 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close