சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி ஆகஸ்ட் 12ல் பதவியேற்பு!

  முத்துமாரி   | Last Modified : 09 Aug, 2018 03:42 pm
dahil-ramani-takes-oath-as-chief-justice-of-madras-high-court-on-aug-12

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை நீதிபதி தஹீல் ரமணி வருகிறஆகஸ்ட் 12ம் தேதி பதவியேற்கிறார். 

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து தஹீல் ரமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாவார். சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை விசாரிப்பதில் தனிச்சிறப்பு மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவர் வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் பன்வரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close