ராகுல்காந்தி பாதுகாப்பில் குளறுபடி: மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

  சுஜாதா   | Last Modified : 17 Aug, 2018 03:21 pm
madras-hc-notice-to-centre-over-alleged-lapses-in-rahul-gandhi-security

திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கில் கலந்துக் கொள்ள ராஜாஜி ஹால் வந்த  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சரியாக பாதுகாப்பு வழங்காதது குறித்து விளக்கம் கேட்டு சென்னை உயர் நீதிமன்றம்,  மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 7ஆம் தேதி காலமான திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கில்  கலந்துக்கொண்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.  அப்போது அவருக்கு வழங்கப்பட்ட  பாதுகாப்பு சரியான முறையில் இல்லை என்ற குற்றசாட்டு எழுந்தது, இதனை தொடர்ந்து   சென்னை உயர்நீதிமன்றத்தில்  
வழக்கறிஞர் சூரியபிரகாசம்  வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழு,  
 
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதி காலமானார். இவரது இறுதி சடங்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துக்கொண்டார். அப்போது இவருக்கு சரியாக பாதுகாப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
 
இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ‘நாட்டின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக நீதி விசாரணை நடத்தி இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலங்களில் நடைபெறாமல் தடுக்க உத்தரவிட வேண்டும். கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பின்னர், விசாரணையை அடுத்த மாதம்(செப்டம்பர்) 14-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close