மீனவர் பாதுகாப்பபைப் பற்றி மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பிய உயர்நீதி மன்றம்!

  திஷா   | Last Modified : 22 Aug, 2018 07:00 am

high-court-questioned-about-fishermen-s-safety

மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும் சிறைப் பிடித்து வைப்பதும் தீர்க்கப் படாத வேதனைக்குரிய விஷயம். இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக மீன்வளத்துறை சார்பாக வாதாடிய வழக்கறிஞர், 'கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையை பாதுகாக்க கச்சத்தீவை மீட்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறோம். மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கடலோர காவல்படை மற்றும் கடற்படையிம் கேட்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், 'நடுக்கடலில் எல்லையை மீனவர்கள் கண்டறிவது கடினம். இலங்கை மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடிக்கின்றனர். மைல் அளவிடும் கருவியை தமிழக மீனவர்களின் படகுகளில் பொருத்தினால், நமது எல்லையை தெரிந்துக் கொள்ள உதவியாக இருக்கும்' என்றனர். அதோடு, மீனவர்களுக்கு பாதுகாப்பாக இந்திய கடற்படை கப்பல்கள் செல்ல முடியுமா எனவும் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர். பிறகு இந்த வழக்கை ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர் நீதி மன்றம்.

மேலும் செய்திகளுக்கு - www.newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close