மதுரை, வேலூர் சிறைகளிலிருந்து 45 கைதிகள் விடுதலை!

  திஷா   | Last Modified : 25 Aug, 2018 04:13 pm
45-prisoner-s-has-released-from-madurai-and-vellore-central-jail

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மற்றும் வேலூர் சிறை கைதிகள் விடுதலை. 
 
நன்னடத்தைக் காரணமாக அவ்வப்போது சிறை கைதிகள் விடுதலையாவார்கள். அந்தவகையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மத்திய சிறையின் ஆயுள் தண்டனைக் கைதிகள் 30 பேரும், வேலூர் மத்திய சிறையிலிருந்து 15 கைதிகளும் விடுவிக்கப் பட்டுள்ளனர். 

இவர்கள் அனைவரும் சிறையில் 10 ஆண்டுகளை கழித்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஜெயிலில் வேலை பார்த்ததற்கான கூலி பணத்தோடு, அறிவுரை வழங்கி சிறைத்துறை அதிகாரிகள் அவர்களை அனுப்பி வைத்தனர்.

கைதிகளின் குடும்பத்தார் சிறை வாசலுக்கு வந்து கண்ணீர் மல்க அவர்களை அழைத்துச் சென்றனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை பாரபட்சமின்றி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விடுதலையானவர்களின் கோரிக்கை. 
www.newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close