எச்.ராஜா நேரில் ஆஜராக உத்தரவு - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 17 Sep, 2018 11:58 am
madras-hc-order-in-h-raja-case

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசியதற்கு, எச்.ராஜாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டது. இதனை தானாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எச்.ராஜா 4 வாரத்திற்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. 

புதுக்கோட்டை அருகே நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, எச்.ராஜா போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தையும், போலீசாரையும் தகாத வார்த்தைகளால் விமர்சித்தார். அவரது இந்த பேச்சு மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும்  ஏற்படுத்தியது. அவர் பேசிய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. 

எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல அரசியல் கட்சிகள், பொதுமக்கள் வலியுறுத்திய நிலையில், சட்டத்தை மதிக்காதது, இரு தரப்பினருக்கு இடையே மோதலை தூண்டுவது, காவல்துறை மற்றும் நீதிமன்றத்தை பற்றி அவதூறாக பேசியது என 8 பிரிவுகளின் கீழ் திருமயம் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக, எச்.ராஜாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டது.  இதனை தானாக முன்வந்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் முதலில் மறுப்பு தெரிவித்துள்ளது. ஹுலுவாடி ரமேஷ் தலைமயிலான அமர்வு மறுப்பு தெரிவித்ததுடன், முறையிட்ட வழக்கறிஞர்களிடம், "நீங்கள் காவல்துறையில் புகார் அளியுங்கள். முகாந்திரம் இருந்தால் எச்.ராஜா மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள் அல்லது நீதிமன்ற அவமதிப்பு என மனுவாக தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் விசாரிக்கப்படும்" என தெரிவித்தது. 

இதையடுத்து, சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ததுடன், எச்.ராஜா 4 வாரத்திற்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close