எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகுங்கள்: சென்னை உயர் நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 22 Sep, 2018 10:37 am
is-madras-hc-coming-back-in-h-raja-case

எச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகுங்கள் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை அருகே நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, எச்.ராஜா போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தையும், போலீசாரையும் தகாத வார்த்தைகளால் விமர்சித்தார். அவரது இந்த பேச்சு மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும்  ஏற்படுத்தியது. அவர் பேசிய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. 

எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல அரசியல் கட்சிகள், பொதுமக்கள் வலியுறுத்திய நிலையில், 8 பிரிவுகளின் கீழ் திருமயம் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், எச்.ராஜாவை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்த முறையீட்டின் அடிப்படையில், சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு எச்.ராஜா 4 வாரத்திற்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

தொடர்ந்து வழக்கறிஞர் சூர்யபிரகாசம் செய்த முறையீட்டில், எச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகுங்கள் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதாவது எச்.ராஜாவை கைது செய்வது, வேறு விசாரணைக்கு மாற்றுவது என எந்த ஒரு நடவடிக்கையானாலும், புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் அல்லது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையை அணுகுங்கள் என கூறியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close