கருணாஸுக்கு போலீஸ் காவல் இல்லை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 27 Sep, 2018 04:17 pm
karunas-is-not-under-police-custody-madras-egmore-courta

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. 

முக்குலத்தோர் புலிப்படை இயக்கத் தலைவரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பற்றி அவதூறாக பேசினார். இவர் பேசிய இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது . சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கின் முதல் விசாரணையில் கொலைமுயற்சி பிரிவு மட்டும் ரத்து செய்யப்பட்டது. பின்னர், அவரை அக்டோபர் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 

தொடர்ந்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், பாதுகாப்பு காரணங்களுக்காக வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், 7 நாட்கள் அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு அளித்தது. இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கருணாஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close