ஸ்டெர்லைட் நில ஒதுக்கீட்டை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை!

  Newstm Desk   | Last Modified : 03 Oct, 2018 06:48 pm
madurai-hc-interim-ban-for-tn-order-over-sterlite-issue

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத்தடை விதித்துள்ளது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில்,  காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையின் 2வது யூனிட் விரிவாக்கத்திற்கு 324 ஏக்கர் நிலத்தை சிப்காட் ஒதுக்கியதையும் தமிழக அரசு ரத்து செய்தது. 

பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என அந்நிறுவனம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட  வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையினை ஆய்வு செய்ய நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து தீர்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில், இந்தக்குழு சமீபத்தில் தூத்துக்குடிக்கு வந்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ததுடன், பொதுமக்களிடம் கருத்துகளையும் கேட்டது.

இதைத்தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. ஸ்டெர்லைட் நிறுவன பொதுமேலாளர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close