ஏ.நடராஜன் தமிழக அரசு வழக்கறிஞராக நியமனம்

  Newstm Desk   | Last Modified : 16 Oct, 2018 12:41 pm
tn-govt-appoints-a-natarajan-as-public-prosecutor-in-hc

மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜனை, சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகளுக்கான அரசு வழக்கறிஞராக தமிழக அரசு நியமித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 1978இல் இருந்து வழக்கறிஞராக பணியாற்றி வருபவர்.

சுமார் 40 ஆண்டுகால அனுபவம் உடைய நடராஜன், ஆட்டோ சங்கர் கொலை வழக்கு, தருமபுரி வேளாண் கல்லூரி மாணவிகள் பேருந்தில் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு, கோவை சங்கர் சாதி ஆணவக் கொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் வாதாடியவர் ஆவார்.

குற்றவியல் வழக்குகளுக்கான அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த ராஜரெத்தினம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராஜிநாமா செய்தார். இதையடுத்து, அந்தப் பதவியை, கூடுதல் அரசு வழக்கறிஞரான சி.எமிலியாஸ், கடந்த ஓராண்டாக கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இந்நிலையில், தற்போது ஏ.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அதே சமயம், எமிலியாசுக்கு, உயர் நீதிமன்றத்தின் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close