மதச்சடங்குகளில் தலையிடுவதில் கட்டுப்பாடு தேவை: சென்னை உயர் நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 20 Oct, 2018 02:01 pm
madurai-court-order-for-srirangam-issue

மதச்சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயக்கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் ஆசிரமத்தின் 11வது பீடாதிபதியாக இருந்த ரங்க ராமானுஜ தேசிகர், கடந்த மார்ச் 19ம் தேதி மரணமடைந்தார். பின்னர், 12வது பீடாதிபதியாக ஸ்ரீ யமுனாச்சாரியார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது ஸ்வீகரம் மற்றும் பட்டாபிஷேகம் நாளை வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், தவறான முறையில் அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறி, அவரது நியமனத்தை ரத்து செய்யவேண்டும் என்று கூறி சென்னையைச் சேர்ந்த வெங்கட வரதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2015ம் ஆண்டு பதினொன்றாவது மடாதிபதி எழுதி வைத்த உயிலின்படி தனக்குப் பிறகு மடாதிபதியாக நியமிக்க மூன்றுபேரை பரிந்துரைத்துள்ளார். அதில் ஒருவர் இறந்து விடவே, மற்ற இருவரில் ஒருவரை தான் நியமிக்க வேண்டும், ஆனால் அந்த இருவரையும் பீடாதிபதியாக நியமிக்காமல் மூன்றாவது நபரை அவசர அவசரமாக நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'இந்த மடம் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கானது என்பதால் இது தொடர்பாக பொது நல வழக்கு தொடர முடியாது. சிவில் வழக்கு மட்டுமே தொடர முடியும். மேலும், மதச்சடங்குகளில் தலையிடுவதில் மதச்சார்பற்ற நீதிமன்றங்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்" என்றும் அறிவுறுத்தினர். 

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஷ்ரமம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close