முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: சிபிஐ விசாரிக்க இடைக்காலத்தடை!

  Newstm Desk   | Last Modified : 29 Oct, 2018 12:16 pm
sc-interim-ban-for-cbi-investigation-against-cm-edappadi-palanisamy-in-tender-scam

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனித்து வரும் நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4,800 கோடி முறைகேடு நடந்துள்ளதாக,  தி.மு.க.சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து, முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இந்த வழக்கை விசாரித்தால் சரியானதாக இருக்காது, எனவே சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என திமுக கூடுதல் மனு அளிக்க, அதை ஏற்று டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, சிபிஐ விசாரணையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் சிபிஐ விசாரணையை ரத்து செய்யக்கோரி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கில், டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க இடைக்காலத்தடை விதித்துள்ளது. மேலும், தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close