குட்கா வழக்கு: ஜாமீன் வழங்க சிபிஐ நீதிமன்றம் மறுப்பு

  Newstm Desk   | Last Modified : 12 Nov, 2018 03:43 pm
gutka-case-cbi-court-refusing-to-grant-bail

குட்கா வழக்கில் கைதான அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில், மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் வரித்துறை அதிகாரி என்.கே.பாண்டியன் ஆகியோர் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஜாமீன் கோரி செந்தில்முருகன், என்.கே.பாண்டியன் ஆகியோர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

ஏற்கனவே, சி.பி.ஐ. நீதிமன்றத்திலும், சென்னை நீதிமன்றத்திலும், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த இவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close